வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (16:55 IST)

காஸ்ட்லி கார் வாங்கிய பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ரம்யா பாண்டியன் பி எம் டபுள்யு கார் புதிதாக வாங்கியுள்ளாராம்.

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.

இதையடுத்து அவர் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனாலும் அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் இன்னமும் பிரபலமாக சுற்றி வருகிறார். அவரை கிட்டத்தட்ட 21 லட்சம் பேர் பாலோ செய்கிறார்கள்.

இந்நிலையில் அவர் ஒரு புதிய பி எம் டபுள் யு காரை வாங்கியுள்ளாராம். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பதிவேற்றியுள்ளார். ஆனால் அந்த காஸ்ட்லி காரை புதிதாக வாங்கவில்லை என்றும் செகண்ட் ஹேண்டில்தான் வாங்கியுள்ளாராம்.