வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:28 IST)

பஹத் பாசிலின் ரசிகர் மன்ற தலைவரான இந்தி நடிகர்!

மலையாள நடிகர் பஹத் பாசிலின் வட இந்திய ரசிகர் மன்ற தலைவராக கஜராவ் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளார்.

திலேஷ் போத்தன் மற்றும் பஹத் பாசில் கூட்டணியில் மூன்றாவது படமாக ஜோஜி என்ற படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். இந்த படம் ஷேக்ஸ்பியரின் நாடகமான மெக்பத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இன்று அமேசான் ப்ரைமில் படம் வெளியானது.

இந்த படத்துக்கு பாராட்டுகள் கிடைத்துவரும் நிலையில் இப்போது பாலிவுட் குணச்சித்திர நடிகரான கஜராவ் படத்தையும் பஹத் பாசிலையும் பாராட்டியுள்ளார். அதில் ‘மலையாள சினிமா உலகினர் பாலிவுட்டை பார்த்து கொஞ்சம் சுமாரானப் படங்களையும் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா இல்லாத நாட்களில் உங்கள் படங்களைக் காண முதல் ஆளாக நான் பாப்கார்னோடு காத்திருப்பேன் என்பதை பஹத் பாசில் வட இந்திய ரசிகர் மன்ற தலைவர் கஜராவ் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.