வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (17:46 IST)

நாங்க எதையும் மறைக்க போறதில்லை!: வெளிப்படையாக வீடியோ வெளியிட்ட ரம்யா நம்பீசன்!

UnHide
நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் உடை கலாச்சாரம்தான் காரணம் என பலர் கூறி வரும் நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.

நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து பேசி வருகின்றன. இந்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்று பெண்களின் ஆடை கலாச்சாரம். அரைகுறை ஆடைகளால்தான் பெண்கள் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக பலர் கூறி வரும் நிலையில் அதை கேள்வி கேட்கும் வகையில் குறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரம்யா நம்பீசன்.

சிறந்த நடிகை மற்றும் பின்னணி பாடகியாக அறியப்படும் ரம்யா நம்பீசன் ‘அன்ஹைட்’ என்ற இந்த வீடியோ தொகுப்பை எழுதி, இயக்கி வெளியிட்டுள்ளார். பெண்களின் ஆடை ஒழுக்கமின்மைதான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் என்றால் சிறு குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களுக்கு வீட்டிற்கு வெளியே நடக்கும் பாலியல் ரீதியான சுரண்டல்களையும், வீட்டில் கணவர்களால் ஏற்பட கூடிய சுரண்டல்களையும் குறித்து பேசியுள்ளார்.

இந்த வீடியோவை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பாராட்டி தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.