1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (11:50 IST)

சம்பளத்தை விட 4 மடங்கு சம்பாதிக்கும் மகேஷ் பாபு – எப்படி தெரியுமா?

மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு தனது சம்பளத்துக்குப் பதிலாக படத்தின் மீதான உரிமைகளை வாங்கிக் கொள்வதால் கல்லா கட்டிக் கொள்கிறார்.

மகேஷ் பாபு, ராஷ்மிகா மற்றும் விஜயசாந்தி ஆகியோரின் நடிப்பில் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து சரிலேறு நீக்கவேரு என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்துக்காக மகேஷ் பாபு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் அவரது சம்பளத்தை விட 4 மடங்கு வருவாயை ஈட்டியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் மார்க்கெட் படி மகேஷ் பாபுவின் தற்போதைய சம்பளம் 20 கோடி ரூபாய் அவர் சரிலேரு நீக்கவேரு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை ஆகியவற்றை மூன்றாவது தயாரிப்பாளர் என்ற முறையில் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவருக்கு 80 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த முறையால் அதிக வருவாய் வருவதால் இனி வரும் படங்களில் எல்லாம் இதே முறையில் உரிமைகளை வாங்கிக் கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.