1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:25 IST)

ஹேப்பி பர்த்டே சிவா அண்ணா... வாழ்த்து மழையில் நனையும் எஸ்கே!

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி பிப்ரவரி 17, 1985ம்  திருச்சியில் பிறந்து வளர்ந்த சிவகார்திகேயன் தனது சொந்த முயற்சியால் சின்னத்திரையில் நுழைந்தது தன்னை மக்களுக்கு  அடையாப்படுத்திக்கொண்டார். அதையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் நடித்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைரத்தார். 
 
அவரது நகைச்சுவையான பேச்சும், யதார்த்தமான நடிப்பும் மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பின்னர் அனைவரும் சிவகார்த்திகேயனை நம்ம வீடு பிள்ளை போன்று பார்க்க துவங்கினர். தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் சில பல சறுக்கல்களையும் சந்தித்தார். ஆனால், விடா முயற்சியுடன் தொடர்ந்து நடித்து இன்று முன்னனி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 
 

 
இந்நிலையில் இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடும் சிவகார்திகேயனுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் இதே போன்று பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக சிறந்து விளங்க வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்....