1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:05 IST)

தனுஷ்40 பட விநியோக உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனங்கள் லிஸ்ட் !

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் தனுஷ்40 படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன்  இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்றது. சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிப்பதால் இதன் டைட்டில் சுருளி என்று கூறப்படுகிறது. அத்துடன் தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது. மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் தமிழ உரிமையை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் GA2UV நிறுவனம் பெற்றுள்ளது. கேரளா உரிமையை anto joseph film company பெற்றுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.