புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (16:14 IST)

நான் அதுக்கு தான் காத்திக்கிட்டு இருக்கிறேன்... "அயலான்" வதந்திக்கு ரகுல் ப்ரீத் காட்டம்!

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படம் அயலான். இப்படத்தை 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கினாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் துவங்குவதாகவும் அதில் ரகுல் பிரித் நடிக்க மறுக்கிறார் என்றும் அவருக்கு பதில் வேறு நடிகையை படக்குழு தேர்வு செய்துள்ளதாகவும் வதந்திகள் பரவியது.  இதனால் செம கடுப்பான ரகுல் பிரித் சிங்,"தயவு செய்து யார் எப்போது ஷூட்டிங் துவங்குகிறார்கள், எங்கு நடத்துகிறார்கள் என்று சொல்லுங்கள்.  நான் மீண்டும் நடிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.

இதற்கு அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார்  "நான் பணியாற்றியதிலேயே ராகுல் ப்ரீத் மிகவும் ப்ரொபஷனல் ஆன நடிகை. இது போன்ற வதந்திகள் மீடியாக்களில் வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. இயல்பு நிலை திரும்பியதும் பணிகளை துவங்கி சூட்டிங்கை முடிக்க உள்ளோம்"  என பதிவிட அதற்கு ரகுல் பிரித் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.