கார்த்தியின் அடுத்த படத்தில் புஷ்பா பட வில்லன்
கார்த்தி அடுத்து இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது இவர், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் இப்போது கேரளாவி முகாமிட்டுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் கூடுதல் அக்கறையோடு படக்குழுவினர் உழைக்கிறார்களாம். இந்த படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்துக்காக கார்த்தி மீசையை எல்லாம் எடுத்து ஸ்டைலிஷான லுக்குக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பொன்னியின் செல்வன் ரிலீஸூக்கு பிறகு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் சமீபத்தில் ஹிட்டான புஷ்பா படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.