1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:02 IST)

கைதி 2 அப்டேட்… இரண்டு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் கைதி. மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது.

மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இதனால் கைதி 2 படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் ரசிகர்கள் இந்த கேள்வியை முன்வைத்த போது ‘கைதி 2 கண்டிப்பாக உருவாகும். அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன’ எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது நடிகர் கார்த்தி கைதி 2 படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட 10 மடங்கு பட்ஜெட் அதிகமாக உள்ள படமாக இருக்கும். மேலும்  கைதி 2வில் டில்லியும் ரோலக்ஸும் மோதுவார்கள்” என்றும் கூறியுள்ளார்.