வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (15:55 IST)

6 மாதத்துக்குள் முடித்துவிடுங்கள்… இயக்குனர் ஷங்கருக்கு உதயநிதி அழுத்தம்!

இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் சில தினங்களாக கமல்ஹாசன் கலந்துகொண்டு வருகிறார்.

ஒரு மாதத்தில் 10 நாட்கள் என இந்த படத்துக்காக கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் தேதியை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் தொடங்கி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் “படத்தை எப்படியாவது 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும்” என இயக்குனர் ஷங்கருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.