ரஜினியின் 2 சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவர் மறைவு.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் காலமானதை அடுத்து ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பதிவு செய்துள்ளார்
ரஜினிகாந்த் நடித்த அடுத்த வாரிசு மற்றும்நான் மகான் அல்ல ஆகிய படங்களை தயாரித்தவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் துவாரகிஷ். இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும் சில படங்களை தயாரித்து இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துவாரகிஷ் இன்று காலமானார் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார். இன்று மாலை இறுதி சடங்கு இன்று நடக்கும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் துவாரகிஷ் மறைவிற்கு ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகேஷ் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடன் பழகிய இனிய நினைவுகள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran