வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2024 (12:55 IST)

தனுஷை மகன் என உரிமை கோரிய முதியவர் உயிரிழப்பு: தனுஷ் இரங்கல் தெரிவிப்பாரா?

நடிகர் தனுஷை தனது மகன் என்று உரிமை கோரிய கதிரேசன் என்ற முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது மறைவுக்கு தனுஷ் இரங்கல் தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர் நடிகர் தனுஷை தனது மகன் என்றும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்றும் சிறுவயதில் காணாமல் போன மகன்தான் தனுஷ் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது 
இந்த நிலையில் தனுஷை தனது மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் உடல் நல குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலை உயிரிழந்தார்
 
அவரது மறைவை தனுஷுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்கு எந்தவித ரியாக்சனும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் கதிரேசன் மறைவுக்கு தனுஷ் இரங்கல் தெரிவிக்க மாட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன. 
 
Edited by Mahendran