திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (15:39 IST)

டூயட், ஸ்டண்ட் வேண்டாம்… இயக்குனர்களுக்கு ரஜினியின் வேண்டுகோள்!

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்பதை தெளிவாக உணர்த்திவிட்ட நிலையில் இப்போது இன்னும் சில திரைப்படங்களில் நடிக்கலாம் என்று இருக்கிறாராம்.

நடிகர் ரஜினியின் அரசியல் வருகை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று தொண்டர்களுக்கு அறிவித்துவிட்டார். இதையடுத்து அவர் இன்னும் சில ஆண்டுகளுக்காவது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளாராம்.

இதையடுத்து இளம் இயக்குனர்களிடம் அவர் கதைக் கேட்டு வருகிறாராம். இனி வரும் படங்களில் தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படும் அவர் படங்களில் தனக்கு டூயட் மற்றும் அதிகமான ஸ்டண்ட் ஆகியவை வேண்டாம் என சொல்லிவருகிறாராம்.