வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (15:13 IST)

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் ரஜினிகாந்த் !

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மைந்துனன் சுதீஸிடன் கேட்டறிந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டதாக இன்று காலை அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் சற்று முன்னர் தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததாகவும் ஆனால் அது சரியாகிவிட்டதாகவும் விஜயகாந்த் தற்போது உடல்நலத்துடன் இருப்பதாகவும் அறிக்கை வெளியானது

இந்நிலையில் விஜயகாந்த்  மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது உடலில் சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இந்நிலையில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது நண்பரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறிந்து அவரது மைத்துனர் சுதீஸிடம் தொலைபேசு மூலமாகக் கேட்டறிந்தார்.

ரஜினியின் சினிமாவுக்கு வந்த ஆரம்பகாலத்தில் மதுரையில் விஜயகாந்த் அவருக்கு மிகப்பெரும் வரவேற்புக் கொடுத்து அவரது ரசிகராக இருந்தது குறிப்பிடத்தக்கது.