செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (08:19 IST)

ரஜினி கேளம்பாக்கம் போனதன் மர்மம் இதுதான்!

கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் திடீரென ரஜினிகாந்த் தனது மகள் மற்றும் மருமகனுடன் கேளம்பாக்கம் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கார் ஓட்டிய ஸ்டில்ஸ் மற்றும் கேளம்பாக்கம் சென்றபோது அவர் இபாஸ் எடுக்காமல் சென்றதாக கிளம்பிய வதந்தி ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் தற்போது அவர் கேளம்பாக்கம் சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. ’அண்ணாத்த’ படத்தில் முகச் சுருக்கம் இல்லாமல் இளமையாக தெரியவேண்டும் என்பதற்காக டாக்டர் ஒருவர் கூறிய அறிவுரையின் காரணமாக நீச்சல் பயிற்சி செய்வதற்காகவே அவர் கேளம்பாக்கம் சென்றதாக கூறப்படுகிறது 
 
தினமும் 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை அவர் கேளம்பாக்கத்தில் நீச்சல் பயிற்சி செய்ததாகவும் இதன் காரணமாக ’அண்ணாத்த’ படத்தில் அவரது முகம் சுருக்கம் இல்லாமல் இளமை தோற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் அண்ணா படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 9 முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது