திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (19:38 IST)

மகளிர் இட ஒதுக்கீடு பற்றி ரஜினி பட நடிகை கருத்து

jailer
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா  மக்களவையில் நிறைவேற்றியது  பற்றி ஜெயிலர் பட நடிகை தமன்னா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில்  பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் பெண் வேட்பாளர்களுக்கு 33 சதவீத தொகுதிகள் ரிசர்வ் செய்யப்படும் என கூறப்பட்டது. இதன் மீதான விவாதம்  மக்களவையில் நடந்து வந்தது.

இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவீதம்  இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில்    நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு  ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.

இன்று புதிய பாராளுமன்றக் கட்டத்தை பிரபல நடிகைகள்  பார்வையிட்டனர் இந்த நிலையில்,  நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா   நிறைவேற்றப்பட்டது குறித்து  ஜெயிலர் பட நடிகை தமன்னா, கூறியதாவது:

‘’மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சமானிய மக்களும் அரசியலுக்கு வருவதை ஊக்குவிக்கிரது. இந்த மசோதா நிறைவேற்றத்தை வரவேற்பதாக’’  தெரிவித்துள்ளார்.