1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:26 IST)

அண்ணாமலை கூறியதுபோல் எந்த செய்தியையும் வெளியிடவில்லை: தி இந்து நிறுவனம் விளக்கம்!

hindu
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நிலையில் இந்த கருத்தை இந்து நாளிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை கூறிய எந்த கருத்தையும் நாங்கள் பதிவிடவில்லை என ஹிந்து நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. 
 
1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் அண்ணா தனது கருத்துக்கு மன்னிப்பு மற்றும் மறுப்பு கேட்டதாக நாங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்று விந்து நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் அண்ணாமலை கூறியது சரிதான் என தேவர் வரலாற்று ஆய்வாளர் நவமணி என்பவர் கூறியுள்ள தகவலும் இணையத்தில் வெளியாகி உள்ளது 
 
Edited by Mahendran