1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2023 (17:57 IST)

நீட் தேர்வில் ஜீரோ எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம்

Mbbs pg neet
இந்த ஆண்டில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற  படிப்புகளில் சேர,  NEET PG தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்றாலும், அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற  படிப்புகளில் சேர,  NEET PG தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள் பெற்றாலும், அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை  மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3 வது சுற்று கலந்தாய்வில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான 3 வது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில்  வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.