செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (15:39 IST)

ரஜினி அரசியலுக்கு வராதது ஏமாற்றம்… கமல்ஹாசன்

சமீபகாலமாக தொலைக்காட்சிச் செய்திகளிலும் பத்திரிக்கைப் பக்கங்களிலும் எதிரொலிக்கப்பட்ட பெயரும் மக்களால் உச்சரிக்கப்பட்ட பெயரும் ரஜினிகாந்த். அதிலும் அவரது கால்நூற்றாண்டைக்கடந்த அரசியல் வருகையில் வெளிப்படையான அறிக்கை அவரது ரசிகர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின்போது, 4 பேருக்கு கொரோனா தொற்றால் ரஜினி ஐதராபாத்தில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அப்போலோ மருத்துவமனையின் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னையிலுள்ள போயஸ்கார்டன் இல்லம் திரும்பவே அவரது மனைவிலதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

இநிலையில் இன்று ஒரு அவசர அறிக்கை வெளியிட்டார். அதில், நான் கட்சி தொடங்கப்போவதில்லை; இதற்காக என்னை மக்கள் மன்னிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது ஏற்கனவே மாற்று சிறுநீரகம் பொருத்தியுள்ளதால், அரசியல் கட்சி தொடங்கினால் ரத்த அழுத்தம் ஏற்பவாய்ப்புண்டு என்று என்னை நம்பி வருபவர்கலை பலிகடா ஆக்கவிரும்பவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன்,நடிகரும் நண்பருமான ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனது ஏமாற்றமே. ஆனால் அரசியலைவிட அவரது உடல்நலம் ஆரோக்கியம் முக்கியம். சென்னை சென்று இல்லத்தில் அவரைச் சந்திப்பேன் எனக் கல்லூரி ஒன்றில் பேசிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.