வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (16:16 IST)

ரஜினி, கமலுக்கு மக்களின் ஓட்டுகள் கிடைக்காது - பிரபல நடிகர் கணிப்பு !

தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரங்கள் ரஜினி கமல்.இருவரும் நாற்பதாண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், இவர்களைக் குறித்து மறைந்த வசந்த் அன் கோ நிறுவனரின் மகனும்  காங்கிரஸ் பிரமுகரும் நடிகருமான விஜய் வசந்த், இவர்களைப் பார்க்கத்தான் மக்கள் கூடுவரே தவிர அது ஓட்டாக மாறாது எனத் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

ரஜினி கமல் இருவரும் வரும்போது, அவர்களை நடிகர்கள் என்றுதான் மக்கள் பார்க்க வருவார்களே தவிர அது ஓட்டுகளாக மாறாது எனத் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு இப்போது நேரம் சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.