புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (19:30 IST)

ரஜினி பட வில்லன் நடிகரின் படம் …5000 தியேட்டர்களின் ரிலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் இந்தியாவிலேயே அதிகளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவார்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள சூர்யவம்சி என்ற படம்வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்தியாவில் மட்டும் 5000 தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வசூல் ரீதியாகப் பெரும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தை ரோஹித் ஷெட்டி, ஹிரோ ஜோகர்,., கரன் ஜோகர், அருணா பாட்டார், அபூர்வா மேக்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு எஸ்.தமன், ஹிமேஸ் ரேஸ்மியா,அமர் மோஹிலே மற்றும் தனிஸ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.