ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 பிப்ரவரி 2021 (08:44 IST)

என் பேரை போடக் கூடாதுன்னு அமைச்சர் சொன்னாரா? மேடையில் பரபரப்பை ஏற்படுத்திய ராதாரவி!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தமிழ் சினிமாவில் உள்ள 24 துறைகளையும் உள்ளடக்கிய சம்மேளமனமாக உள்ளது. இதற்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வைக்கப்பட்டு தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த இரண்டு முறையாக ஃபெப்சிக்கு தலைவராக ஆர் கே செல்வமணி தேர்வு செய்யப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவரின் பதவிக் காலம் முடிந்த நிலையில் மீண்டும் அவரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பதவியேற்கும் நிகழ்வு நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் சங்க முன்னாள் தலைவர் ராதாரவி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியவர்கள் கலந்துகொண்டனர். அப்போது சிறப்பு விருந்தினர்கள் பெயர் பொறிக்கப்பட்ட பேனரில் தன்னுடைய பெயர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியான ராதாரவி மேடையிலேயே ‘என்னுடைய பெயரை போடவேண்டாம் என்று அமைச்சர் சொன்னாரா?’ என செல்வமணியை நோக்கிக் கேட்க, அவர் இல்லை என பதிலளித்தார். இதனால் மேடையில் சற்று நேரம் தர்மசங்கடமான சூழல் உருவானது.