செம பன்ச் வசனத்துடன் ரஜினிக்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் S.P.சௌத்ரி!
இன்று 70 வது பிறந்தநாள் கொண்டாடவும் சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் S.P.சௌத்ரி.
நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினிக்கு சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகரும் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளருமான S.P.சௌத்ரி ரஜினிக்கு அவரது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார்.
அதாவது, *ஏறுபவனுக்கு இமயமலை...*எதிர்ப்பவனுக்கு எரிமலை இந்த அண்ணாமலை* என்கிற செம பஞ்ச் வசனத்துடன் தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.