செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 12 டிசம்பர் 2019 (12:42 IST)

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரஜினி ஆதரித்தாரா??

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ரஜினி ஆதரித்ததாக பரவிய செய்தி போலி என தெரியவந்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரும் சட்டத்திருத்ததிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கமல் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ரஜினி இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்தி வெளியானது. அதில், ”குடியுரிமை சட்டத்திருத்தத்தை வரவேற்கிறேன். நாட்டு மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை” என கருத்து தெரிவித்த்தாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்ததாக் வெளிவந்த செய்தி போலி என தெரியவந்துள்ளது.