1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. What is the reason for the tower worship It is good...?

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவதற்கான காரணம் என்ன...?

கோபுர தரிசனம்
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம் ஏன் கோபுர தரிசனத்திற்கு அத்தனை முக்கியத்தும்  கொடுத்தார் என்றால், நமது ஆகம் விதிப்படி கோவில்களை நிர்மாணித்து முறையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் அனைத்தும்  முறையாக நடந்து கொண்டிருக்கும் ஆலயங்களில் இருக்கும் கோபுரங்களின் உச்சியில் கலசங்கள் இருக்கும்.
இவ்வாறு வைக்கப்படும் கலசங்களின் உச்சியில் கூரிய முனை வழியாக வானத்தில் இருக்கும் உயிர் சக்தியை முழுமையாக அவற்றுள்  கிரகித்துக் கொண்டு வெளியிடுகிறது. அந்த உயிர் சக்தியை நாம் தரிசித்துப் பெறுவதால் நமக்கு புத்துணர்ச்சி, மனதில் தூய்மையும், நோய்  எதிர்ப்பு சக்திகளும் கிடைக்கிறது. இந்த காரணங்களினால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி  வைத்தார்கள்.
 
கோபுரத்தின் உச்சியில் இருப்பதை போலவே ஒவ்வொரு கர்ப்பகிரக கோபுரத்தின் மேலும் கலசங்கள் இருக்கும். இந்த கலசங்களும் அதே போல  உயிர் சக்தியை கிரகித்து கலசத்தின் நேர கீழே உள்ள கர்ப்பகிரகத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பீடத்திற்கு அனுப்பி கொண்டிருக்கும்.
 
ஒவ்வொரு ஆலயத்திலும் கர்ப்பக்கிரகத்தின் கிழக்கு அல்லது வடக்கு திசைகலில் அபிஷேக நீர் செல்வதற்காக துவாரம் அமைக்கப்பட்டு  இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் அபிஷேக நீரிலும் உயிர் சக்தி கலந்து வெளிப்படுகிறது. அதனால்தான் அபிஷேக நீர்  வெளிப்படும் இடத்தில் கோவிலை வலம் வரும்போது நாம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நொடிகளில் நம் மீதும் உயிர்  சக்தி பரவுகிறது. இது ஆன்மீக ரீதியிலான விளக்கம் மட்டுமல்ல. விஞ்ஞான ரீதியாகவும் இதை நிரூபித்திருக்கிறார்கள்.
 
அப்படி தொடர்ந்து சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால்தான் ஆலயங்களில் சிலைகளின் குறுக்கே செல்லக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள். இதனால்தான் சுவாமி சிலைகளின் குறுக்கே செல்லாமல் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும் என்றும்  கூறப்படுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
தீய பலன்கள் தரும் கனவுகள் எவை தெரியுமா....?