1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (07:08 IST)

பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் கொரோனாவுக்கு பலி: கோலிவுட் அதிர்ச்சி

பிரபல தயாரிப்பாளரின் சகோதரர் கொரோனாவுக்கு பலி:
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சென்னையில் ஒரு சில பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிலர் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது 
 
இதனை அடுத்து தற்போது பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் தனஞ்செயன் அவர்களின் சகோதரர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தனது சகோதரர் மற்றும் அவருடைய மனைவி மகன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாகவும் அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தனஞ்சயன் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்
 
மேலும் தனது சகோதரரின் சிகிச்சைக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பாக தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதை அடுத்து அனைவரும் வீட்டில் கவனமாக இருக்கவும் என்றும் அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது