திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 மே 2021 (16:54 IST)

நடிகை பிரியா பவானி சங்கரை திராவிட சொம்பு எனக் கலாய்த்த நபர்… பதிலடி கொடுத்து ஷட்டப்!

நடிகை பிரியா பவானி சங்கர் வெற்றி பெற்ற திமுகவுக்கு வாழ்த்து சொல்ல அவரை பலரும் திராவிட சொம்பு என கேலி செய்ய ஆரம்பித்தனர்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிஅமைக்க உள்ள திமுகவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.  இதையடுத்து சிலர் அவரை திராவிட சொம்பு என வம்பிழுக்க அவர்களுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுத்து எல்லோர் வாயையும் மூட வைத்து வருகிறார்.