தமிழில் ஒரே படம்தான்… ஆனால் நயன்தாராவுக்கு சமமாக சம்பளம்!

Last Modified செவ்வாய், 4 மே 2021 (14:09 IST)

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழில் இதுவரை ஒரே படம் மட்டுமே ரிலீஸாகியுள்ள நிலையில் அவரின் சம்பளம் நயன்தாரவின் சம்பளத்துக்கு நிகராக உள்ளதாம்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.


இந்த படத்தில் அவருக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது கிட்டத்தட்ட தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருக்கும் நயன்தாரவின் சம்பளத்துக்கு சமம் என்கின்றனர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களும் ஹிட்டாகியுள்ளதால் தயாரிப்பாளர்களும் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து விடுகிறார்களாம்.இதில் மேலும் படிக்கவும் :