1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:07 IST)

இந்த இடத்தில ஷூட்டிங்கா? ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து அலறி அடித்து ஓடிய நடிகை!

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இயக்கி, தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்போது படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில் படம் சம்மந்தபப்ட்ட காட்சி ஒன்றை நிஜமான சுடுகாட்டில் எடுத்துள்ளது படக்குழு. அந்த காட்சியில் நடிக்க வந்த பூர்ணிமா நிஜமான சுடுகாடு எனத் தெரிந்ததால் தன்னால் அங்கெல்லாம் நடிக்க முடியாது என சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டாராம். அதன் பின்னர் சுடுகாடு போன்ற செட் அமைக்கபப்ட்டு அந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.