செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (19:25 IST)

ராகவா லாரன்ஸ் புதிய பட டைட்டில் அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் என்பதும் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்குவதில் தயாரிப்பதும் இவரது வழக்கம் என்பதும் தெரிந்ததே
 
அந்த வகையில் தற்போது ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்களை கையில் வைத்துள்ள ராகவா லாரன்ஸ் தற்போது மேலும் ஒரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
சற்றுமுன் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் டைட்டில் ’துர்கா’ என்று அறிவித்துள்ளார். இந்த டைட்டில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த டைட்டில் போஸ்டரில் உள்ள ராகவா லாரன்ஸ் கெட்டப் ஆச்சரியப்படுவதற்கு உள்ளது என்பதும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிரட்டும் வகையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அவர் தனது ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது