செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:17 IST)

ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி திரைப்படத்தின் டைட்டில் இதுதான்!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக நடிகை காயத்ரி நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய மூவரும் வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ’இடி முழக்கம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த டைட்டில் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார் என்பதும் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கலைமகன் முபாரக் என்பவர் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிவடைந்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்