1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:34 IST)

ராகவா லாரன்ஸை பங்கமாக கலாய்த்த இயக்குனர் ரத்னகுமார்!

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ் என்பதும் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்குவதில் தயாரிப்பதும் இவரது வழக்கம் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்களை கையில் வைத்துள்ள ராகவா லாரன்ஸ் தற்போது மேலும் ஒரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்தின் டைட்டில் ’துர்கா’ என்று அறிவித்துள்ளார். இந்த டைட்டில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த போஸ்டரில் ராகவா லாரன்ஸின் ஒட்டுத்தாடி குறித்த கேலி எழுந்தது. அந்தவகையில் இயக்குனர் ரத்னகுமார் அதை கேலி செய்து தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்ய பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.