தனுஷுக்கு ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை!
நடிகை பூஜா ஹெக்டே அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில் விஜய் படத்தில் வாய்ப்புக் கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. அந்த வகையில் தனுஷின் புதிய படம் ஒன்றிலும் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.