வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (12:07 IST)

விக்ரம் படப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ்: முதல் நாள் படப்பிடிப்பில் கமல்- விஜய்சேதுபதி

விக்ரம் படப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ்: முதல் நாள் படப்பிடிப்பில் கமல்- விஜய்சேதுபதி
கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே 
 
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று முதல் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
இன்று தொடங்கும் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும் என்றும் இந்த படத்தை 3 மாதத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தை அடுத்து பாபநாசம் 2, இந்தியன் 2 என அடுத்தடுத்து கமலஹாசன் பிஸியாக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.