நீதிபதியின் சர்ச்சை கருத்து: அப்பீல் செய்கிறாரா விஜய்?
நடிகர் விஜய் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்ட வழக்கில் நீதிபதி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதை அடுத்து அதுகுறித்து அப்பீல் செய்ய விஜய் தரப்பு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
சமீபத்தில் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததோடு சில அறிவுரைகளையும் கூறினார்
சினிமா ஹீரோவாக இருந்தால் மட்டும் போதாது ரியல் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம், விஜய் குறித்து தனிப்பட்ட முறையில் நீதிபதி விமர்சிக்க தேவையில்லை என்ற கருத்து உலவி வந்தது
இதனை அடுத்து நீதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விஜய் தரப்பு அப்பீல் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன