திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (15:45 IST)

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் ப்ரிமியர்… டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

மறைந்த எழுத்தாளர் கல்கி 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து வெளிநாடுகளில் படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் 15 நாட்களுக்கு முன்பே செய்யப்பட்டு விட்டன. இதனால் அமெரிக்காவில் பிரிமீயர் காட்சிகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கிவிட்டது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகளுக்கு கட்டணமாக 20 டாலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாம். இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 1500 ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.