செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 27 மே 2020 (13:02 IST)

பொன்மகள் வந்தால் பாடல் டீசர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதனை அடுத்து சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவெளியிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் நாச்சியார் , காற்றின் மொழி , என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து தற்போது மீண்டும் கணவர் சூர்யாவே தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைதுள்ள இப்படத்தில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கினாள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வருகிற மே 29-ம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாகும். இந்நிலையில் இப்படத்தின் புதிய பாடல் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.