திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 20 மே 2020 (15:16 IST)

பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாகவிருக்க வேண்டிய படம். ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன  இந்த படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் மே 29-ஆம் தேதி திரையிடவுள்ளனர். இதன் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கொரோனா ஊரடங்கில் வெளியாகும் இப்படத்தை காண அனைவரும் ஆவலுடன் கின்றனர்.

இந்நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை தயாரிப்பளாரும் நடிகருமான சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் காட்சி இடம்பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.