1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (12:32 IST)

ஜோதிகாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்: போல்ட் அட்டெம்ப்ட் எடுக்கும் கோலிவுட் நாயகிகள்!!

ஜோதிகாவின் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேசின் படம் ஒன்றும் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாக உள்ளது. 
 
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என்றும், இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. அவற்றில் முதல் படியாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படம் அமேசானில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில் தற்போது இதன் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
அதன்படி, ஜூன் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்க பதிவில் உறுதிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது.