1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2020 (16:00 IST)

மாஸ்டர் படப்பிடிப்பில் போலீஸ் தடியடி...வேட்டி உருவி ஓடும் ரசிகர்கள் - வீடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வந்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கையோடு சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து  இரண்டு நாட்கள் விடிய விடிய விஜய்யிடம் விசாரணை நடந்தது. 
 
இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகவும் என கூறப்பட்டது. ஆனால் செய்யும் தொழிலில் பொறுப்பாக செயல்படும் விஜய் பிரச்சனை முடிந்த அடுத்த நாளே ஷூட்டிங் கிளம்பி சென்றுவிட்டார். இதனால் வருத்தத்தில்  இருந்த விஜய் ரசிகர்கள் பெரு மூச்சு விட்டு நிம்மதியடைந்தனர். 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. ஆனால். பாஜகவினர் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று கூறி போராட்டம் செய்து வருகின்றனர். அந்த சமயத்தில் விஜய்க்கு ஆதரவாக நின்ற அவரது ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அந்த இடமே கலவரமாக மாறியது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது பரவலாக பரவி வருகிறது.