வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (17:12 IST)

இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை: மீடூ குறித்த விஜய் கவிதை

மீடூ விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படத்தியுள்ள  நிலையில், கவிஞர் பா.விஜய் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் கவிஞர் மற்றும் நடிகர் பா.விஜய் ’மீடூ’ தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கவிதை வருமாறு:
 
ஒரு மீ டூ கவிதை
எழுதட்டுமா என்றேன்
மீம்ஸ் போடுவார்கள்
மிரட்டினர் நட்புகள்
மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது
 
ஞாயிற்றுக் கிழமை என்பதால்
மீ டூ உடன்
மீனும் சேர்ந்து கொண்டது.
 
மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது
மீன் 1
மீ டூ மீ டூ என்றால் என்ன?
 
மீன்  2 சொன்னது
மீ டூ மீ டூ என்றால்..
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றானே பாரதி
அதுதான் மீ டூ
 
புரிந்த மீன் 1
தெளிந்து கேட்டது..
 
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்
என்றாயே பாரதி... ஒருசில
மாதர் செய்யும் மடமையை
யார் கொளுத்துவது?
 
மீனிங் புரிந்த மீன் 2
இது மீ டூ பிரச்சனை என்று 
மீண்டது.
இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை
 
-பா.விஜய்
 
இவ்வாறு கவிதையாக மீடு குறித்து விஜய்  கூறயுள்ளார்.