1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (15:50 IST)

வைரமுத்துவின் காலில் விழுந்தது ஏன்?- சின்மயி விளக்கம்

திருமண விழாவில் வைரமுத்து காலில் விழுந்தது ஏன் என்பது குறித்து சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

 
‘மீ டூ' ஹேஷ்டேக் இயக்கம் மூலம் தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் பலரும் “உங்களுடைய திருமணத்திற்கு வந்த வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்” என்று  கேள்வி எழுப்பி வந்தார்கள். 
 
இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களிடம் சின்மயி விளக்கம் அளித்தார்.
 
எனது திருமணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைத்ததற்குக் காரணம் கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா? என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக் கொண்டே பத்திரிக்கை வைத்தேன்.
 
திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது. இவ்வாறு சின்மயி தனது பேட்டியின் போது விளக்கம் அளித்தார்.