செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 ஜனவரி 2021 (15:08 IST)

எங்கடா பவி டீச்சர காணோம்… மாஸ்டர் பார்த்து கடுப்பான ரசிகர்கள்

இணையத்தில் மிகப்பெரிய ஆர்மி வைத்திருக்கும் பவி டீச்சர் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும்  மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. அதில் முதல் பாதி சிறப்பக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக நீளாமாக இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் வசூல் அளவில் மாஸ்டர் திரைப்படம் வெற்ற்கிகரமாகவே திகழ்கிறது.

இந்த படத்தில் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஆனால் அவர்கள் படத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஸ்பேஸ் இல்லை என்று படம் பார்த்த பின்னர்தான் தெரியவந்தது. அதில் மிக முக்கியமாக ஆஹா கல்யாணம் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த பவி டீச்சர் என்று அழைக்க்கப்படும் பிரிதிகாவைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக சென்றனர். ஆனால் பிரிதிகா படத்தில் அதிகபட்சம் ஒரு நிமிடத்துக்கு மேல் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.