நயன்தாராவைக் கலாய்த்தாரா மாளவிகா மோகனன்! கடுப்பான ரசிகர்கள்!
நடிகை நயன்தாராவைக் கலாய்க்கும் விதமாக மாளவிகா மோகனன் பேசியதாக இணையத்தில் புது சர்ச்சை உருவாகியுள்ளது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர் திரைப்படம் வெளியாக நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள நிலையில் அவர் மேல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கவனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவை கேலி செய்யும் விதமாக ஒரு கருத்தை சொல்லியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவரிடம் சினிமாவில் நீங்க பார்த்த நகைச்சுவை காட்சி எது எனக் கேட்கப்பட்ட போது பிரபல நடிகை முழு மேக்கப்பில் சோகமாக அழுத ஒரு காட்சிதான் நான் பார்த்த சிறந்த நகைச்சுவைக் காட்சி எனத் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடும் நடிகை நயன்தாராதான் என முடிவு செய்த ரசிகர்கள் அதைப் பரப்ப இப்போது நயன்தாரா ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகாவை வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.