விஜய் சேதுபதி கலக்கும் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் புரோமோ வீடியோ
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். இந்த படத்தில் விஜய்சேதுபதி பல கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் சுமார் மூஞ்சி குமாரு பேசப்பட்டது போன்று கவுதம் கார்த்திக்கின் இந்த கதாபாத்திரம் பேசப்படும் என்று இயக்குநர் கூறியிருந்தார்.
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தில் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.