செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (22:15 IST)

கவுதம் கார்த்திக்கிற்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம் இல்லை; விஜய் சேதுபதி இயக்குநர்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் இயக்குநர் படத்தில் கவுதம் கார்த்திக்கின் கதாபாத்திரம் பற்றி கூறியுள்ளார்.

 
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். இந்த படத்தில் விஜய்சேதுபதி பல கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. 
 
இந்நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ஆறுமுக குமார் கூறியதாவது:-
 
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் சூப்பர் காமெடி படம். இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடித்த பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரை வைத்தும் என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு சொரணை இல்லாத கதாபாத்திரம் கவுதமுடையது. 
 
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் சுமார் மூஞ்சி குமாரு பேசப்பட்டது போன்று கவுதம் கார்த்திக்கின் இந்த கதாபாத்திரம் பேசப்படும் என்று கூறியுள்ளார்.