விஜய் சேதுபதியின் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா
சீனு ராமசாமி இயக்கும் ‘மாமனிதன்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் நான்காவது முறையாக இணைய இருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல, தன் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவோடு சேர்ந்து இசையமைக்கிறார். மூவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுதான் முதல்முறை.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இந்தப் படம் முடிந்தபிறகு ‘மாமனிதன்’ படத்தைத் தொடங்க இருக்கிறார்.