புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (08:47 IST)

இந்தியிலும் ரீமேக் ஆகும் ஓ மை கடவுளே! பணிகள் தொடக்கம்!

அசோக் செல்வன், ரித்விகா மற்றும் வாணி போஜன் ஆகியவர்கள் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்  பின்னர் ஒடிடி தளத்தில் வெளியான போதும் மிகப்பரவலான கவனத்தைப் பெற்றது.  இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.

அசோக் செல்வனுடன் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றி அறிந்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி ரிலீஸுக்கு  முன்னரே இதன் ரீமேக் ரைட்ஸ்களை வாங்கி இப்போது இயக்குனர் அஷ்வத்தை வைத்தே இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இப்போது இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளனர். தெலுங்கு பதிப்பை இயக்கி முடித்த பின்னர் அஷ்வத் மாரிமுத்துவே இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.