செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (20:07 IST)

சிம்புவின் மாநாடு பட டீசரை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார் !

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை மதியம் 02.34 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டீசரை ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளார்.
 


நாளை சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமான மாநாடு பட டீசர் நாளை ரீலிசாகிறது. கருதப்படுகிறது.

மாநாடு படத்தின் இந்தி டீசரை பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் வெளியிடவுள்ளார்.

அதேபோல் மாநாடு படத்தின் மலையாள டீசரை பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் பிரதிவிராஜ் வெளியிடவுள்ளார்

 மாநாடு படத்தின் கன்னட டீசரை பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் மாநாடு படத்தின் தமிழ் டீசரை சிம்புவே தனது டுவிட்டரில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பட டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் ஆகிய 5 மொழிகளில் மாநாடு படத்தின் டீசர் நாளை மதியம் சரியாக 02.34 மணிக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்புவுக்கு பிரேக் கொடுத்த படமாகும். இப்படத்தை கௌதம் மேனன் இயக்க, ரஹ்மான் இசையமைப்பில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது. அதேபோல் அச்சம் என்பது மடமையடா படத்திற்கும் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.