1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:16 IST)

மதியம் 02.34க்கு வெளியாகும் சிம்பு படத்தின் டீசர்!

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தின் டீசர் மதியம் 2 மணிக்கு வெளியாகும் என்று சற்று முன்னர் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்புவின் மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் நேரம் 02.34 என ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற ரசிகர்களின் கேள்விக்கு இதுவரை படக்குழுவினர் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது